முள்ளங்கி வகையை சேர்ந்த டர்னிப் காய் ஊதா, பச்சை போன்ற நிறங்களில் காணப்படும்.
இதில் அதிகமாக கார்போஹைட்ரேட், குறைவான கலோரி, அதிக நார்சத்து, புரோட்டின், கொழுப்பு, விட்டமின் C, மினரல், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது.
எனவே இந்த டர்னிப் காய்களை அடிக்கடி தங்களின் உணவில் சேர்த்துக் கொண்டால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
டர்னிப் காயை அடிக்கடி சாப்பிடுவதன் நன்மைகள்
ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
விட்டமின் C மற்றும் இரும்பு சத்து மிக்க டர்னிப் காயை ரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிட்டால், ரத்த விருத்தி உண்டாகும்.
ஊதா நிற டர்னிப்பை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சிறுநீரக கற்களை கரையும். அதோடு ரத்த அழுத்தம் சீராகும்.
ஊதா நிறமுள்ள டர்னிப் காய் குடல் புற்றுநோய் வராமல் தடுத்து, பற்கள், எலும்புகள் மற்றும் ஈறுக்களின் வலிமையை அதிகமாக்கும்.
டர்னிப் காயில் அதிக நார்சத்து மற்றும் குறைவான கலோரி உள்ளது. அதனால் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் இதை அடிக்கடி சாப்பிட்டால் ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.