• Sun. Oct 12th, 2025

இந்த கொடுமையை கேட்க, யாரும் இல்லையா…?

Byadmin

Jun 19, 2024

ஆண் துக்கணாங்குருவியானது மூன்று நாட்களாக படாத பாடுபட்டு கூட்டைக் கட்டிய பிறகு ஆடியவண்ணம், பாடியவண்ணம் தன் கூட்டை பார்வையிட பெண் தூக்கணாங்குருவியை அழைத்து வருமாம். 

பெண் தூக்கணாங்குருவியை ஆண் தூக்கணாங்குருவி கூட்டி வந்து கூடு காட்டுவது ஒரு லேசிப்பட்ட காரியமல்ல. சரி அப்படித்தான் பெண் தூக்கணாங்குருவி வந்து கூட்டை பார்வையிட்டாலும் அது ஏதோ கட்டுமான இன்ஸ்பெக்டர் வந்து பார்ப்பது போலவே மிகவும் உன்னிப்பாக பார்க்குமாம். 

எப்படியும் பெண் தூக்கணாங்குருவி வந்து பார்த்த பிறகு கூட்டை அப்படி மாற்று, இப்படி மாற்று என்று சொல்லாமல் இருக்காதாம். இந்த நேரம் ஆண் தூக்கணாங்குருவி வேறு  வழிகள் இல்லாமல் மாற்றங்கள் செய்ய நிர்ப்பந்திக்கப் படுமாம். 

அந்த மாற்றங்கள் செய்யும் சமயங்களில் கூட பெண் குருவி, நடனம் ஆடிக்கொண்டும் பாடல் பாடிக்கொண்டும் தான் மாற்றங்கள் செய்யுமாம். காரணம் பெண் குருவி காத்திருக்கும் நேரம் சளைக்கக் கூடாது என்ற பயம்தானாம்.

சரி, அதைவிட கொடுமை என்னவென்றால்,   சிலசமயம் ஆண் தூக்கணாங்குருவி இவ்வளவு மாற்றங்கள் செய்த பிறகும் பெண் தூக்கணாங்குருவி நினைத்தால் காரணம் சொல்லாமலே கூடு சரியில்லை என்று அதன் பாட்டில் சென்றுவிடுமாம். 

இந்த கொடுமையை கேட்க யாரும் இல்லையா…🤔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *