இலங்கையில் தெதிகம என்னும் பகுதியில் மியான்மர் முஸ்லிம்கள் ஒளிந்திருப்பதாக கூறி பெளத்த பிக்குகள் அந்த இடத்தை சுற்றி வளைத்துள்ளனர். குறித்த இடத்திற்கு தற்போது பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர், சிறு பதற்றநிலை தொடர்கிறது! குறிப்பிட்ட இடத்தில் மியான்மர் முஸ்லிம்கள் சிலர் கைதாகி உள்ளதாகவும் கொழும்பில் உள்ள, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலக பாதுகாப்பின் கீழிருந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று அந்த தகவல் தெரிவித்துள்ளது.