நாடாளுமன்றத்தின் அவசர அமர்வு ஒன்று இன்று (26.09.2017) இடம்பெறவுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் கட்டளை திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றும் நோக்கில் இந்த அமர்வு பிற்பகல் ஒரு மணி முதல் இரவு 7.30 மணி வரை இடம்பெறவுள்ளது. இதன்போது, பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநாகர சபைகள் கட்டளை திருத்தச் சட்டங்களை இன்று நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.