• Sat. Oct 11th, 2025

ரோஹிங்ய முஸ்லிம்கள் தொடர்பில் இவ்வரசின் கொள்கை தான் என்னவோ?

Byadmin

Sep 26, 2017

ஒரு விடயத்தில் இவ்வரசின் ஆட்சியாளர்கள் ஆளுக்கொரு கொள்கையை கடைப்பிடிப்பதை ரோஹிங்ய முஸ்லிம்கள்விடயத்திலும் காட்டியுள்ளதாக பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

இலங்கையில் பல கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து கூட்டாட்சி செய்வதாக கூறப்படுகிறதுஇருந்தபோதிலும் இலங்கையில் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள கட்சிகளிடையே ஒரு விடயத்தில் ஒரு கொள்கைகடைப்பிடிக்கப்படுவதாக காணக்கிடைக்கவில்லைஒரு விடயத்தில் ஒரு கொள்கையை கடைப்பிடிக்க முடியாமல்போனால் கூட்டாட்சி என்ற ஒன்று அமையப்பெற்றதில் எந்த இலாபமுமில்லைஅது கூட்டாட்சியினுடைய பண்புமில்லை.

ரோஹிங்ய முஸ்லிம்கள் மீதான விசா தடைகண்டனம் தெரிவிக்காமை போன்ற விடயங்கள் இலங்கை முஸ்லிம்கள்மத்தியில் மிகவும் அதிருப்தியை தோற்றுவித்திருந்ததுஅண்மையில் பாராளுமன்றத்தில் வைத்து உரையாற்றியவெளிவிவகார அமைச்சர் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை கண்டித்ததோடு அவர்களுக்குஉதவி செய்யவும் தயார் என்ற அறிவிப்பை விடுத்திருந்தார்.

இவரின் அறிவிப்பின் பின்னணியில் சில காரணங்கள் இருப்பதாக யூகிக்க முடிகின்ற போதும் அது முஸ்லிம்களுக்குமகிழ்வை அளித்திருந்ததுஇவரது இந்த அறிவிப்பானது வார்த்தை ரீதியான மகிழ்வை கொடுத்திருந்தாலும் செயல்ரீதியான மகிழ்வை கொடுத்திருக்கவில்லைஇந்த அறிவிப்பு வந்த மறு நாள்பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ரோஹிங்யமக்களை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை போன்ற கடுந் தொனியிலான கருத்தை வெளியிட்டிருந்தார்.

வெளிவிவகார அமைச்சர் உதவ போகிறார்பிரதமர் கண்டிக்கின்றார் என்றால்  ரோஹிங்ய மக்கள் விடயத்தில்இவ்வரசின் கொள்கை தான் என்னஇனவாதத்தையும் இனவாதிகளையும்  அடிப்படையாக கொண்டு ஆட்சி செய்யும்இவ்வரசால் ஒரு போதும் ரோஹிங்ய மக்களுக்கு உதவ முடியாதுரோஹிங்ய மக்களுக்கு சார்பான நிலைப்பாட்டைஇலங்கை அரசு எடுத்தாலும் சரி எடுக்காவிட்டாலும் சரி முதலில் ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்ஆளுக்கொரு நிலைப்பாட்ட வெளிப்படுத்துவதன் மூலம் ஆளுக்கொருவரை இலங்கை ஆட்சியாளர்கள் யாரை திருப்திசெய்ய முனைக்கின்றார்களோ தெரியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *