• Sat. Oct 11th, 2025

நல்லாட்சி அரசாங்கத்தில் இலங்கையிலுள்ள ரோஹிங்ய அகதிகளுக்கும் சோதனை! (வீடியோ)

Byadmin

Sep 26, 2017

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலக பாதுகாப்பின் கீழ் சட்டபூர்வமாக இலங்கை, கல்கிஸ்ஸை முகாமில் இருந்த சிறு குழந்தைகள் உட்பட அனைத்து ரோஹிங்ய அகதிகளையும் பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (26/09/2017) இலங்கை, கல்கிஸ்ஸை முகாமில் இருந்த ரோஹிங்ய அகதிகளை சுற்றி வளைத்த இனவாத அமைப்பான சிங்கள ராவய இயக்கம், அவர்களின் பிரசாரத்தை பிரபல்யப்படுத்துவதற்காக  பெரும் பதற்ற நிலையை உருவாக்கி அவர்களுக்கு எதிரான பொய் வதந்திகளை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி அந்த இடத்தில் மக்களையும் பொலிசாரையும் ஒன்று கூட்டி  சிறு குழந்தைகள் உட்பட அனைத்து ரோஹிங்ய அகதிகளையும்  கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகளில் யுத்தம் நடக்கும்போது பாதிக்கப்பட்ட மக்கள் பிற நாடுகளில் தஞ்சம் அடைவது வழக்கம், இலங்கை யுத்த காலத்தில் தமிழ் மக்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். அடிப்படையிலேயே ரோஹிங்ய அகதிகள் இலங்கையில் தஞ்சம் அடைந்து  ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலக பாதுகாப்பின் கீழ் சட்டபூர்வமாக இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை இனவாதிகள் சொல்வதுபோல , ஒழித்து மறைத்து வைப்பதற்கு  ஒரு பேனையோ பென்சிலோ அல்ல. இவர்களுக்கான மாதாந்த கொடுப்பவாக நபருக்கு 10 ஆயிரம் ரூபா படி ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் (UNHRC)  வழங்கப் பட்டுவருவது யாவரும் அறிந்த உண்மை.

இதுபோல சம்பவங்களை , இந்த நல்லாட்சி அரசாங்கள் கண்டும் காணாததுபோல இருப்பதைக் கொண்டு இந்த அரசுக்கு வாக்களித்த முஸ்லிம் மக்கள் பெரிதும் மனவேதனையடைந்துள்ளனர். இந்த இனவாதிகளுக்கு ஏன் இந்த அரசாங்கம் இன்னும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை, இதன் பின்னணி என்ன என ஆச்சரியப்படுகிறார்கள். இந்த வீடியோவைக் கட்டாயம் பார்த்து எல்லோருக்கும் SHARE பண்ணவும்….

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *