இனி எடுபுடிகளுக்கெல்லாம் வேல வரப்போகுது,
கள்ளன் களப்படியெல்லாம் கட்சிக்காரனென்டு கொடி புடிக்கப் போறானுகள்,
உரிமை, உம்மத்து,உலக சமாதானமென்டு ஊடு ஊடா
ஊர் ஊரா புழுகித் திரியப் போறானுகள்,
ஆட்டுக்குட்டிக்கும்
ஆலங்குளத்து வளவுக்கும்
கட்சி மாறினவனெல்லாம்
தனித்துவம் தன்மானம் என்டு பனியாரம் சுட வரப்போறானுகள்,
விடிய விடிய குடிக்கிறவனெல்லலாம் நமக்கு விடிவை பெற்றுத் தருவதாய்
பீத்தி திரியப் போறானுகள்,
இருவதுக்கு மண்டய ஆட்டின மடயனுகள்,
பதினெட்டுக்கு கைய ஒயத்தி பக்கட்ட
நெறப்பின ஆக்களெல்லாம்
நம்மள பாதுகாப்பானுகளாம் என்டு
பதறியடிச்சிக்கி வருவானானுகள்.
சேமன்ட காக்கா மாமா
மினிஸ்டர்ர தம்பி மருமகன்
தலைவர்ர கோடினேட்டர்
கடைசிக்கு கோடினேட்ரர்ர கோடினேட்டர்
காக்காவோட சேந்து கள்ள அரசியல் செஞ்ச ஆக்கள்
பட்டப்பகல்ல ஆட்ட வெட்ற மாரி மனிசன வெட்டின அறிவாளிகள்,
மஹிந்தக்கி சொம்பு தூக்க
கொழும்புக்கும் காலிக்கும் பஸ் புடிச்சி போன ஆக்கள்,
ஊரான்ட கோழி அறுத்து உம்மாட பேர்ல கத்தம் ஓதின ஆக்கள்,
காசி வாங்கிக்கு தொழில் குடுத்த ஆக்கள்,
எல்லானும் வருவானுகள் சொந்தமென்டு செல்லி,
பெர்நாள் காசி கேக்குற மாரி வோட்டு கேப்பானுகள்,
போடாத கிரவல போட்டதா கணக்கு முடிச்சவன்,
வாங்காத பல்புக்கு வவுச்சர் நெறப்பினவனுகள்,
பத்தாத லைட்டுக்கு பல மில்லியன் செழவழிச்சவனுகள்,
ஆத்த மூடி அறவாக்கினவனுகள்
காக்காக்கும் மாமாக்கும் கொன்ட்ரக்ட பிரிச்சி குடுத்து குடுத்து கொல்லையடிச்சவனுகள்,
ஊர் ரோட்ல ஊட்ட கட்டிக்கி ஒடக்க ஏலான்டு சண்டித்தனம் காட்டினவனுகள்
ஆனயும் வெளங்காம பூனயும் வெளங்காம அல்லக்கையா அலஞ்சவனுகள்,
ஓதல் படிப்பு ஒன்டும் ஏறாதவனுகள்
ஒருவனுக்கும் ஒருவாயும் பிசகாத கஞ்சப் பிசநாரிகள்,
எட்டப்பன் ஏமாத்துக்காரன் எல்லானும் இனி வருவானுகள்……
-Addalaichani Nisry –