• Sat. Oct 11th, 2025

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் மரணம்

Byadmin

Jul 1, 2024

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் நேற்று இரவு 11 மணியளவில் கொழும்பில் காலமானார்.
உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இரா.சம்பந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார்.
இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சம்பந்தனின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவரது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *