• Sun. Oct 12th, 2025

ட்ரம்ப்பை சுட்டவர் தொடர்பில் வௌியான அதிர்ச்சி தகவல்

Byadmin

Jul 14, 2024

தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியவர் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். 
இதன்போது கூட்டத்தில் இருந்த நபரொருவர் டொனால்ட் டிரம்ப்-ஐ சுட்டார். இந்த சம்பவத்தால் பரபரப்பு சூழல் ஏற்பட்டது.
துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் காதில் இருந்து இரத்தம் சிந்தியது.
இதைத் தொடர்ந்து டிரம்ப்-ஐ பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிக்கொண்டு அவரை அங்கிரிந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 
முதற்கட்டமாக துப்பாக்கி சூடு நடத்தியவர் 20 வயதேயான தோமஸ் மெத்யூ க்ரூக்ஸ் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 
அவர் சுமார் 05 முறை துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதுடன், இதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 70 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள பகுதியில் வசித்து வந்துள்ளார் என்று எஃப்பிஐ தெரிவித்துள்ளது.
துப்பாக்கி சூடு நடத்திய தோமஸ் மெத்யூ க்ரூக்ஸ்-ஐ பாதுகாவலர்கள் சம்பவ இடத்தில் வைத்தே சுட்டுக் கொன்றனர். 
இவர் ஏன் டிரம்ப்-ஐ சுட முயன்றார் என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ-பைடன் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு கடும் கண்டனம் வௌியிட்டுள்ளதோடு, தனது அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்துள்ளதாக வௌிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *