இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் கல்கிஸ்ஸயில் தங்கவைக்கப்பட்டிருந்த ரோஹிங்ய அகதிகள் மீது நேற்றைய தினம் சிங்கள இனவாதிகளின் திடீர் முற்றுகை தொடர்பில் தன்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் நீதியமைச்சர் தலதா அத்துகோறள குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நாடாளுமன்றில் நேற்றைய தினம் விமல் வீரவன்ச வினவிய நிலையில் இந்த விடயத்தினை பாதுகாப்பு அமைச்சிடமே கேட்க வேண்டும் எனவும் தனக்கும் இதற்கும் தொடர்பில்லையெனவும் தலதா மேலும் தெரிவித்துள்ளார்.