எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என அஸாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் நாட்டில் அரச புலனாய்வு பிரிவு இயங்கியதாகவும் தற்போதய அரசாங்கத்தில் அது இயங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரோஹிங்யா அகதிகள் விடயத்தில் போலியான வதந்திகள் பரப்பப்படுவதாக கூறியுள்ள அவர் முகநூல் வட்சப் ஊடாக இனவாதம் பரப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு பல தடவைகள் கூறியும் பாரமுகமாக உள்ளார்கள்.
தற்போது இந்த விடயங்கள் உச்சத்தை தொட்டுள்ளது.நாட்டில் எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம்.