• Sat. Apr 4th, 2026

சனத் ஜயசூரியவின் அதிரடி நடவடிக்கை

Byadmin

Jul 20, 2024

கிரிக்கெட் வீரர்கள் மிகவும் அடக்கமாக நடந்து கொண்டால், போட்டிகளில் தோல்வியடையும் போது மக்களிடம் இவ்வளவு திட்டுகளை கேட்க வேண்டிய அவசியம் இருக்காது என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நவீன வீரர்களுக்கு சில குறைபாடுகள் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அணி அடக்கமாக இருந்திருந்தால் … போட்டிகள் தோல்வியடைந்த போதிலும் இலங்கை மக்கள் இவ்வளவு நாள் திட்டியிருக்க மாட்டார்கள்.
அணியை மக்கள் விரும்பினர்.
 எனவே, இலங்கை கிரிக்கெட் அணிக்கு தற்போது புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 நான் கேள்விப்பட்டதில், அவர் முதலில் செய்த காரியம் அனைவரின் முடியையும் வெட்டியது தான்.
காதணிகளை அகற்றி. அனைத்தையும் செய்துள்ளார்.
சனத் ஜயசூரிய போன்ற வீரர்கள் விளையாடும் போது அவர்கள் நல்ல ஒழுக்கத்துடன் விளையாடினார்கள் என்று நினைக்கிறேன்.
அவர்களின் ஆரம்பம் நன்றாக ஞாபகம் இருந்தது. இன்றைய நவீன வீரர்கள் கொஞ்சம் குறைவு தான்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *