• Mon. Oct 13th, 2025

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாரான 10 வேட்பாளர்கள்!

Byadmin

Aug 1, 2024

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் இதுவரை தமது கட்டுப்பணத்தை வைப்பு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி. லியனகே, சஜித் பிரேமதாச, பி.டபிள்யூ.எஸ்.கே. பண்டாரநாயக்க, விஜயதாச ராஜபக்ஷ, கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய மற்றும் அஜந்த டி சொய்சா ஆகியோரே இவ்வாறு கட்டுப்பணத்தை வைப்பு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும்.

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *