ஓ பிரபஞ்சதுளியே
நானே நீ என்பதை மறந்தவனே.
உனக்கு ஒன்றை தெளிவாக
சொல்ல விரும்புகிறேன.
உனக்குள் உயிராய் இருப்பவன் நானே.
உன் உயிருக்கு வேகத்தையும்,விரைவையும் அளித்துக் கொண்டிப்பவன் நானே.
உனக்குள் உணர்ச்சியை
உருவாக்குபவனும் நானே.
உன் உடலுக்குள் பசியை
உருவாக்குபவன் நானே.
பசியை போக்கும் உணவாக
வெளியே இருப்பவனும் நானே.
உனக்குள் விருப்பமாகவும்,
வெளியே உன் விருப்பத்திற்கு
தடையாக இருப்பவனும் நானே.
உனக்குள் வெப்பமாகவும் ,வெளியே குளிர்ச்சியாகவும் இருப்பவனும் நானே.
உனக்கு உள்ளே தாகமாகவும், வெளியே தாகத்தைப் போக்கும் தண்ணீராகவும் இருப்பவனும் நானே.
உனக்கு சுதந்திரத்தை கொடுப்பனும் நானே. அந்த சுதந்திரத்திற்கு தடையாக இருப்பனும் நானே.
உனக்குள் கோபமும் வெளியே சாந்தமாக்கும் மெல்லிய தென்றலுமாய் இசையுமாய் இருப்பனும் நானே.
உனக்குள் வலியை உருவாக்குபவன் நானே. அவ்வலியை போக்கும் மருந்தும் நானே.
என்னுள் தான் நீ கருவானாய்.
என்னுள் தான் நீ வளருகின்றாய்.
என்னுள் தான் நீ கரைகின்றாய்.
பிறவித் தொடர்கள் முடிந்தவுடன்
தஞ்சமடைவதும் என்னிடமே.
எல்லாம் வேண்டும் என்று கேட்கிறாய்.
அனைத்தும் கொடுப்பேன் உன் தகுதிக்கேற்ப.
நல் எண்ணத்தை மனதில் விதை
அது விருட்சமாகி அன்பும்
கருணையுமாக எங்கும் மலரும்.
பிரபஞ்ச சக்தி உன்னுள் பெருகும்.
தேவையற்ற கர்மவினைகள் கழியும்.
கேட்டதும் கிடைக்கும்
நீ கேட்காததும் கிடைக்கும்
உன் எண்ணவலிமைக்கேற்ப.
உன் தன் மாற்ற நிலைமைக்கேற்ப
அறிவாய். உணர்வாய்
என் பிரபஞ்சதுளியே.
R. S. Manohar