இன்று (29/09/2017) அதிகாலை திஹாரிய, கலகெடிஹேன பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான 4 மாடி வர்த்தக நிலையம் முற்றாக எரிந்துள்ளது.
வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் EURO-LANKA எனப்படும் தமது வர்த்தக நிலையத்திலேயே இப்பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளதாகவும் உரிமையாளர் தெரிவித்தார்.
இலங்கையில் அண்மைக் காலமாக பெருபாலும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வணிக நிலையங்கள், வியாபர ஸ்தாபனங்கள் பல கோடி ரூபாக்கள் பெறுமதியான பொருட்களுடன் தீப்பற்றி எரிந்து நாசமாவதும் அதன் பின்னர் பொலிசார் வயர்சோர்ட் என சொல்வதும் வாடிக்கையாகி விட்டது, இதுவும் ஒரு இனவாத செயலாக இருக்கலாம் எனவும் அங்குள்ள மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.