வயநாடு நிலச்சரிவால் ஏராளமான கேரள மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ள நிலையில், பலர் தற்போது முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து உதவி வரும் நிலையில், நடிகர் மோகன்லால் 3 கோடி (இலங்கை ரூபாவில் 10.71 கோடி ரூபாய் ) நிதி அளித்துள்ளார்.
ஒரு மாதமாக கேரளாவில் பெய்து வரும் பருவ மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, ஒரே நாளில் ஏராளமான மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பறித்துவிட்டது. ஏற்கனவே 2018-ஆம் ஆண்டு கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், இப்போது மீண்டும் இயற்கையால் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கிய மக்களை பத்திரமாக மீட்பு படையினர் மீட்டு அனுமதித்துள்ளது ஒருபுறம் இருக்க, இதுவரை சுமார் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார். இன்னும் புதை மண்ணில் சிக்கி சிலர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக, கேரள முதல்வர் பினராயி விஜயனின் நிவாரண நிதிக்கு, வசதி படைத்தவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதியை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா 50 லட்சமும், நயன்தாரா 20 லட்சமும், நஸ்ரியா – பகத் பாஸில் 25 லட்சமும், விக்ரம் 20 லட்சமும், மம்முட்டி மற்றும் துல்கர் சல்மான் இருவரும் 35 லட்சமும் நிதி கொடுத்துள்ளனர்.
இவர்களை தொடர்ந்து அடுத்தடுத்து பல பிரபலங்கள் கேரள மக்களை இந்த துயரத்தில் இருந்து மீட்க… நிவார பொருட்களை அனுப்பி வருகிறார்கள். தற்போது பிரபல நடிகர் மோகன் லால், ஆர்மி உடையணிந்து வயநாடு பகுதியை பார்வையிட்டது மட்டும் இன்றி மூன்று கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் இது மிகவும் துயரமான சம்பவம் என தன்னுடைய வேதையையும் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.
ஏற்கனவே சூர்யா 50 லட்சம் கொடுக்கும் போது, மலையாள திரை உலகை சேர்ந்த சூப்பர் ஸ்டார் மம்முட்டி 35 லட்சமே அதுவும் மகனுடன் சேர்ந்து கொடுத்துள்ளார் என்று சிலர் சமூக வலைதளத்தில் விமர்சித்து வந்த நிலையில், தற்போது மம்மூட்டியை விட பல மடங்கு தொகையை மோகன்லால் அள்ளிக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கேரளாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் விஜய் இதுவரை எவ்வித நிவாரண நிதியையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.