• Sun. Oct 12th, 2025

வாக்காளர் ஒருவர் அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்ய முடியும்?

Byadmin

Aug 19, 2024

ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்காக செலவிடக்கூடிய தொகையை குறிப்பிடும் வர்த்தமானி இன்று (19) வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (17) இடம்பெற்ற கலந்துரையாடலில் வேட்பாளர்கள் ஐம்பது சதம் முதல் 1000 ரூபா வரையிலான பெறுமதியின் கீழ் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, ஒரு வாக்காளருக்குச் செலவிட அனுமதிக்கப்பட்ட தொகை, வேட்புமனுக்கள் பெறப்பட்ட 5 நாட்களுக்குள் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும்.

இது தொடர்பில் முடிவெடுப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை வேட்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வேட்பாளர்கள் ஐம்பது சதம் முதல் 1000 ரூபா வரையிலான பெறுமதியின் கீழ் கோரிக்கைகளை முன்வைத்ததாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்காக செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை குறிப்பிடும் வர்த்தமானி இன்று வெளியிடப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *