• Sat. Oct 11th, 2025

2 பொது சுகாதார பரிசோதகர்கள் மரணம்

Byadmin

Aug 26, 2024

களுத்துறை, அவிட்டாவ, இஹலகந்த பிரதேசத்தில் எத்தாவெடுனுவெல என்ற இடத்தில் நீரில் நீராடச் சென்றவர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் மற்றும் 4 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இன்று (25) காலை நீராடச் சென்றுள்ளனர்.

அப்போது 2 பொது சுகாதார பரிசோதகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய எஸ். கெளதம் மற்றும் எகொட உயன சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்த எஸ். ஹர்ஷநாத் ஆகிய பொது சுகாதார பரிசோதகர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சடலங்களின் பிரேத பரிசோதனை நாளை (26) நடைபெறவுள்ளதுடன், இத்தேபான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *