• Sat. Oct 11th, 2025

முதல் தடவையாக புகையிரதத்தில் கொண்டு செல்லப்பட்ட குப்பைகள்!

Byadmin

Aug 26, 2024

இன்று (25) முதல் தடவையாக பொதி செய்யப்பட்ட குப்பைகளை புகையிரதத்தில் கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வனவாசலை குப்பை பொதி செய்யும் நிலையத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகள், புத்தளம் அருவக்காடு குப்பை மேட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

756 இல இன்ஜினை கொண்ட புகையிரதத்தில் 20 கொள்கலன்களில் இந்த குப்பைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

குப்பைகளை ஏற்றிய கொள்கலன்கள் வனவாசலையில் இருந்து புத்தளம் வரை சென்று அங்கிருந்து அருவக்காடு குப்பை மேட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

நூர் நகர் புகையிரத நிலையம் அருகே நேற்று மற்றும் இன்று பிற்பகல் இந்த குப்பைகளை புகையிரதத்தில் கொண்டு செல்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *