• Sat. Apr 4th, 2026

ஒரு தேங்காயின் அதிகபட்ச விலை 75 ரூபா – மீறினால் தண்டனை

Byadmin

Oct 1, 2017
தேங்காய் ஒன்றின் அதி­க­பட்ச சில்­லறை விலை 75 ரூபா­வாக இருக்க வேண்டும். அதை­விட அதிக விலைக்கு தேங்காய் விற்­பனை செய்­வது தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும் என தெங்கு உற்­பத்திச் சபையின் தலைவர் கபில யகன்­த­வெல தெரி­வித்­துள்ளார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
தேங்காய் ஒன்றை நுகர்­வோ­ரிடம் சேர்க்கும் வரை­யி­லான முழுச்­செ­ல­வு­க­ளையும் கருத்தில் கொள்­கின்ற போது தேங்காய் ஒன்றின் அதி­க­பட்ச சில்­லறை விலை­யினை எழு­பத்­தைந்து ஷரூபா­வாக வரை­ய­றுத்­துக்­கொள்ள முடியும்.
இதேவேளை, சந்தையில் அதிகரித்துள்ள தேங்காயின் விலையை மட்டுப்படுத்தும் நோக்கில் நாளை முதல் 75 ரூபா கட்டுப்பாட்டு விலையில் தேங்காயை சந்தைப்படுத்த பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, நாளை முதல் ச.தொ.ச. விற்பனை நிலையங்களிலும், நடமாடும் தேங்காய் விற்பனை லொறிகளிலும் கட்டுப்பாட்டு விலையில் தேங்காயைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.
அரச தோட்டங்களிலிருந்து பெறப்படும் தேங்காய்கள் இவ்வாறு விநியோகிக்கப்படவுள்ளதாவும், தேங்காய் விலை 100 ரூபாவாக அதிகரித்துள்ளதனால் ஏற்பட்டுள்ள மக்களின் சுமையைக் குறைப்பதற்கே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *