• Fri. Nov 28th, 2025

வௌ்ளப்பெருக்கு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Byadmin

Nov 26, 2024

மகாவலி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திம்புலாகல, எச்சிலம்பட்டை, ஹிங்குராங்கொட, கந்தளாய், கிண்ணியா, கோறளைப்பற்று வடக்கு, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில, தாமன்கடுவ, தம்பலகாமம் மற்றும் வெலிகந்த D/S பிரிவுகள் ஆகிய இடங்களில் மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *