• Sun. Jun 14th, 2026

சரிந்து விழுந்த மண்மேட்டில் சிக்கி பெண் பலி!

Byadmin

Nov 26, 2024

சீரற்ற வானிலை காரணமாக பண்டாரவளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (26) காலை 7 மணியளவில் இடம்பெற்றதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதுடைய பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *