• Sat. Apr 4th, 2026

வலுவான நிலையில் தென்னாபிரிக்கா!

Byadmin

Nov 29, 2024

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான டர்பனில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாளான (28) ஆட்டம் நிறுத்தப்பட்ட போது, தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 3 விக்கெட்டுகளுக்கு 132 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அதன்படி, தென்னாபிரிக்கா அணி 281 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ள அணித்தலைவர் டெம்பா பவுமா 24 ஓட்டங்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 17 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் எய்டன் மார்க்ரம் அதிகபட்சமாபக 47 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் பிரபாத் ஜயசூர்ய 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மேலும், விஷ்வ பெர்னாண்டோ 33 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா அணி 191 ஓட்டங்களையும், இலங்கை அணி 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *