• Sat. Apr 4th, 2026

A/L பரீட்சை நாளைமுதல் மீண்டும் ஆரம்பம்

Byadmin

Dec 3, 2024

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை(4) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக 27ஆம் திகதி முதல் பரீட்சை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இதனை தொடர்ந்து, நாளை முதல் மீண்டும் பரீட்சை ஆரம்பிக்கப்படும் எனவும், நாளைய தினம் இடம்பெறவுள்ள பாடங்களின் படி பரீட்சைகள் வழமை போன்று நடைபெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர(Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.

மேலும், பரீட்சை நடைபெறாத நாட்களில் நடத்தப்பட்ட பாடங்களை எதிர்வரும் நாட்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகளை நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டன. இந்தநிலையில், இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் நாளை (04)ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நடடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *