• Sun. Oct 12th, 2025

ஞானசாரவுக்கு ஜம்மியதுல் உலமா துணை போகக் கூடாது !

Byadmin

Oct 15, 2017

இன்று ஞானசார தேரருக்கு விளக்கமளிக்க முனையும் அகில இலங்கைஜம்மியதுல் உலமா அன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸகாலத்தில் எவ்வாறான விளக்கங்களை வழங்கியது என்பதை விளக்கவேண்டுமென முன்னாள் பானதுறை பிரதேச சபை தலைவர் இபாஸ் நபுகான்கேள்வி எழுப்பியுள்ளார்.

அவத் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இன்று அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை  ஞானசார தேரருக்குஇஸ்லாம் பற்றிய விளக்கமளித்து வருவதாக தனது ஊடக அறிக்கையிலேயேகுறிப்பிட்டுள்ளது.ஞானசாரசார தேரருக்கு இஸ்லாம் பற்றி விளக்கமளிப்பதுஎப்போதே நடந்திருக்க வேண்டிய விடயம். இப்போது அவர் பொறியில்இறுகியுள்ள சந்தர்ப்பத்தில் நடாத்தவேண்டிய தேவை என்னவுள்ளது? அன்றுமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் இவ்வாறான என்னமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இவர்கள் இஸ்லாம் பற்றி விளக்கமளித்துவரும் சம காலப்பகுதியிலேயேஅவர் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை ஊடகவியலாளர் மாநாடுநடாத்தி கூறி வருகிறார்.அவர் திருந்திவிடுவார் என்ற ஒரு சிறுசமிஞ்சையையாவது காட்டியிருந்தால் இது பற்றி சிந்தித்திருக்கலாம். அல்லது அவர் சில விடயங்கள் குறித்து அகில இலங்கை ஜம்மியதுல்உலமாவை பகிரங்க விவாதத்து அழைத்திருந்தார் அப்போதாவது உலமாசபை சென்றிருக்கலாம்.

இப்போது அவருடன் பேச்சுக்கு செல்வது, அவரை காப்பாற்றும் முயற்சியாகபார்ப்பத் தவிர வேறு கோணத்தில் பார்க்க முடியாதுள்ளது. அவர்முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை பேரின மக்களிடத்தில்விதைத்துள்ளார்.

அவைகளை பேரின மக்களின் உள்ளங்களில் இருந்து கூட்டி சுத்தம் செய்யவேண்டிய தேவை உள்ளது. இதற்கு அவர் தனது கருத்துக்களை பிழையெனபகிரங்கமாக ஏற்க வேண்டும். இதன் பின்னால் இருந்த சக்திகள் பற்றிவெளிப்படுத்த வேண்டும். அவர் அவ்வாறு செய்வாராக இருந்தால் நாம்அவரருடன் சமரசம் பேசலாம் அதேநேரம்  அவரின் நீதி மன்ற விடயங்கள்தொடர்பில் நாம் தலையிட முடியாது.அவ்வாறில்லாமல் அவரின் பிடியைவிடுவிப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

இன்று ஞானசாரவுடன் பேச்சுக்கு செல்லும் முஸ்லிம் குழுவினர், முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் விண்னுலகிலாஇருந்தார்கள். ஏன் அன்று ஒரு நீதி, இன்று ஒரு நீதி? முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஸ காலத்திலும் இவ்வாறான முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டிருந்தால் பிரச்சினைகள் குறைவடைந்திருக்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தில் பிரச்சினைகள்தீர்க்கப்படாமைக்கு முஸ்லிம்களும் ஒரு காரணம் என்பதை இவற்றினூடாகஅறிந்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *