• Sun. Oct 12th, 2025

உண்மையான மனம் மாற்றம் ஏற்பட்டவர்களுடனேயே சமரசம் பேச வேண்டும்

Byadmin

Oct 15, 2017
ஞானசார தேரரை காப்பாற்றுவதற்கு பாரிய நிகழ்சி நிரல் ஒன்றுமுன்னெடுக்கப்படுவதாக வடரக

விஜித தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஞானசார தேரருக்கு எதிராக ஐம்பதுக்கும் அதிகமான வழக்குகள்விசாரணையில் நிலையில் அவற்றில் பல வழக்குகளில் அவர்குற்றவாளியாக இணங்கானப்பட வாய்ப்புள்ளதாக அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் ஒருவருடன் சமரசம் பேசுவதும் நல்வழியில் வரவிரும்புபவருக்குவாய்ப்பு மன்னிப்பு வழங்குவதுமே மனித நேயம் அதனையே சகலமதங்களும் போதித்துள்ளன.இந்த போதிலும் ஞானசார தேரர் அவரதுஉள்ளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக சமரசத்திற்கு வருகிறாராஎன்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாவற்றுக்கும் முன்னால் பொது பல சேனா தங்கள் கொள்கைகளைமாற்றிக்கொண்டுவிட்டதாக நாட்டிற்கு அறிவிக்க வேண்டும்.முஸ்லிம்மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்.முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்த என்னிடம் மன்னிப்பு கோரவேண்டும்.
அப்படியல்லாமல் அவர்களுடன் சமரசத்திற்கு செல்வது பயனற்றதாகும்.
ஞானசார தேரர் விதைத்த விதைகள் இன்று மஹோசன் பலகாய , சிங்கலேஎன பலதரப்பட்ட பெயர்களில் மரங்களாக  வளர்ந்துநிற்கின்றன.இவைகளை நிறுத்துவதற்கு இனவாதிகளின் கால்களில் போய்விழவேண்டிய அவசியமில்லை நீதியை சரியாக நிலைநாட்டுவதேஅவசியம்.அதுவே இனவாதிகளுக்கு வழங்கும் சிறந்த பாடமாக அமையும்.
ஜனாதிபதி ஆலோசராக உள்ள சுமங்கள தேரர் ஜனாதிபதியுடன்சுற்றித்திரியும் அஸாத் சாலி போன்றவர்கள் முன்னெடுக்கும் இந்த ரகசியகலந்துரையாடல்களின் பின்னனியில் டீல்களே இருக்க முடியும் மக்கள்அவதானமாக இருக்க வேண்டும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *