இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் உறுப்பினரான பணியாற்றும் நிஹால் பொன்சேகா வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு, பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று(16) அழைக்கப்பட்டுள்ளார். திறைச்சேரி பிணை முறி விநியோகம் தொடர்பில், ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில், நிஹால் பொன்சேகா இன்று அழைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.