மழையுடனான காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயாளர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 158, 854 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 390 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு செயலனியின் ஆலோசனை பிரகாரம் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.