அரிசிக்காக அடுத்த வாரம் முதல் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படவுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.
தனியார் துறையினர், அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்காதுள்ள நிலையில் குறித்த இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அண்மையில் கூடிய வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தின் போது இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நாட்டரிசி 1Kg 74 ரூபாவாகவும், சுதேச சம்பா 1Kg 85 ரூபாவாகவும் அதிகூடிய சில்லைறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்னும், வெள்ளை அரிசி 1Kg 65 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் துறையினர் அதனை மீறி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.