• Sun. Oct 12th, 2025

வீதியோர மரத்தில் நாவப்பழம் பறித்த கணவன் மனைவிக்கு பத்தாயிரம் ரூபா அபராதம் விதித்த அம்பாறை நீதிமன்றம்

Byadmin

Oct 16, 2017

அம்பாறை பக்கியல்ல பொலிஸ் பிரிவிலுள்ள 39ம் கட்டையில் வீதியோரம் காணப்பட்ட நாக மரத்தில் நாகப்பழம் பறித்த ஒருவருக்கு அம்பாறை நீதிமன்றம் பத்தாயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த கணவனும் மனைவியும் அம்பாறைக்கு திருமண வீடொன் றுக்கு கடந்த 30.9.2017 மோட்டார் சைக்கிளில் சென்று வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் பக்கியல்ல பொலிஸ் பிரிவிலுள்ள 39ம் கட் டையில் வைத்து வீதியோரம் ஒரு வெற்றுக்காணியில் காணப்பட்டநாக மரத்தில் நாகப்பழம் பறித்துள்ளனர்.

மனைவி தனது சாரியின் முந்தானையை பிடிக்க கணவன் அந்த நாகமரத்தில் காணப்பட்ட நாகபழத்தினை பறித்துள்ளார்.

நாகப்பழங்கள் மனைவியின் சாரியின் முந்தானைக்குள் விழுந்து கொண்டிருந்த போது அங்கு திடீரென வந்த பக்கியல்ல பொலிசார் இந்த காணியில் நாகப்பழம் பறிக்க முடியாது எனவும் நாகப்பழம் பறித்தது சட்ட விரோதம் எனவும் கூறி கணவனை பொலிசார் கைது செய் துள்ளனர்.

இதனையடுத்து கணவனை பக்கியல்ல பொலிஸ் நிலையத் திற்கு அழைத்துச் சென்ற பொலிசார் பின்னர் மனைவி பிணை நின்று கணவன் விடுதலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்க 12.10.2O7 புதன்கிழமையன்று அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்ட விரோதமாக அக்காணியில் நாகப்ப ழம் பறித்தமைக்காக பத்தாயிரம் ரூபா அபராதம் செலுத்துமாறு அம்பாறை நீதிவான் நீதிமன்ற நீதவான் உத்தர
விட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *