• Fri. Nov 28th, 2025

பணவீக்கத்தில் பாரிய மாற்றம்

Byadmin

Dec 23, 2024

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த ஆண்டுச் சராசரி முதன்மைப் பணவீக்கம் 2024 நவம்பரில் -1.7% ஆக மேலும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2024 ஒக்டோபரில் பணவீக்கம் -0.7% ஆக பதிவாகியிருந்ததாக மக்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது, ஒக்டோபர் 2024 இல் 1.3% ஆகப் பதிவான உணவுப் பணவீக்கம் 2024 நவம்பரில் 0% ஆகவும், உணவு அல்லாத வகையின் பணவீக்கம் -2.3% இலிருந்து -3.1% ஆகவும் குறைந்துள்ளதாக சமீபத்திய தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *