சீனாவின் Chengdu நகரில் இலங்கையின் கொன்சுலர் அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
“அந்த மாநிலத் பிரதானி எங்களுக்குத் தேவையான இடத்தையும் வசதிகளையும் இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டார். அதன்படி, எதிர்காலத்தில் Chengdu நகரில் வெளியுறவு அமைச்சாக ஒரு புதிய கொன்சுலர் அலுவலகத்தைத் திறக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.” என்றார்.
ஜனாதிபதியின் சீன விஜயம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது, இரு தரப்பினருக்கும் இடையே பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.