• Sat. Apr 11th, 2026

ஜித்தாவிலிருந்து வந்தவரிடம் இருந்து ஐந்து கிலோவுக்கும் அதிக நிறையுடைய தங்கம்

Byadmin

Oct 19, 2017

ஐந்து கிலோவுக்கும் அதிக நிறையுடைய தங்க ஆபரணங்களை கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை விமான நிறுவனத்தில் பணியாற்றும், 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 4.00 மணியளவில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கன் எயார்லைன்சுக்கு சொந்தமான யூ.எல். 282 என்ற விமானத்தில் ஜித்தாவிலிருந்து வருகை தந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து சுமார் 5.3 கிலோகிராம் நிறையுடைய தங்க ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் இலங்கைப் பெறுமதி சுமார் 26 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *