• Sat. Apr 4th, 2026

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

Byadmin

Feb 6, 2025

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளீர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் இன்றைய போட்டியுடன் இலங்கை அணியின் வீரர் திமுத் கருணாரத்ன சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *