வில்பத்து காட்டை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அழிப்பதாக பெரும்பான்மைகடும்போக்காளர்கள் பிரசாரம் முன்னெடுக்கும் நிலையில் வில்பத்துபிரதேசத்தில்
அமைச்சர் ரிஷாத் 40 பள்ளிவாயல்களை நிர்மாணித்துள்ளதாக கடும்போக்குஇணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.முஸ்லிம் நாடுகளின் அனுசரணையுடன் வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம்குடியேற்றங்களை அமைப்பதாகவும் இதுவரை 40 பள்ளிவாயல்களைநிர்மாணித்துள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகள் அரசுக்கு தகவல்வழங்கியுள்ளதாக கடும்போக்கு இணையதளங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
பொதுபல சேனாவுடன் சமரசம் பேச அமைச்சர் ரிஷாத் மறுத்துள்ளநிலையில் மீண்டும் அவருக்கு எதிரான பிரசாரங்கள் பொதுபல சேனா முகநூல் மற்றும் அதன் ஆதரவு இணையதளங்களில் முன்னெடுக்கப்படுவதுகுறிப்பிடத்தக்கது.