ஞானசார தேரருக்கு விளக்கம் அளிக்கவோ அவருடன்பேச்சுவார்த்தை நடத்தவோ தனக்கு எந்தவித தேவையும்இல்லை என சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மடவளைநியுசுக்கு குறிப்பிட்டார்.
வில்பத்துவின் எல்லைகள் முஸ்லிம்களின் சொந்தக்காணிகள்,எல்லைகள் மீள் குடியேற்றம் முஸ்லிம்களின் பூர்வீகம்என்பன தொடர்பில் ஞானசார தேரருக்கு சட்டத்தரணி ருஷ்திஹபீப் பேராசிரியர் நவ்பல் ஆகிய இருவரும் பெயர்குறிப்பிடப்பட்டுள்ளதாக ஞானசார தேரருடன் பேச்சுவார்த்தைநடத்தும் குழு தகவல் வெளியிட்டுள்ளதாக இன்றைய பத்திரிகைசெய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு இஸ்லாம் தொடர்பில் முஸ்லிம் குழு ஒன்றுவிளக்கம் அளித்து வரும் நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமைநடைபெறவுள்ள 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெறஉள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையிலே ஞானசார தேரருக்கு விளக்கம் அளிக்கவோஅவருடன் பேச்ச்சுவார்த்தை நடத்தவோ தனக்கு எந்தவிததேவையும் இல்லை என சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப்மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.