சம்பந்தப்பட்ட விசாரணை பூர்த்தியடைந்த பின்னர் அதிபருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று அதிகார சபையின் தலைவிசட்டத்தரணி திருமதி மரினி டி லிவேரா தெரிவித்துள்ளார்.
ஹிக்கடுவ கல்வி வலயத்தில் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும்ஆலோசகர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நேற்று இடம்பெற்றசெயலமர்வில் இந்த விடயத்தை அதிகார சபையின் தலைவி தெரிவித்தார்.
கரையோர வலய சிறுவர் பாதுகாப்புக்கான திட்டமொன்றைமுன்னெடுப்பதற்காக இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அனுராதபுரம் மாவட்டம் ஹெக்கிராவைப் பகுதியில் உள்ள பாடசாலையில் 10ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி வாந்தி எடுத்தமையால் சந்தேகடைந்த பாடசாலை அதிபர், அம்மாணவி கர்ப்பமுற்றிருப்பதாக தெரிவித்து அவரை பாடசாலையில் இருந்து நீக்கி உள்ளார்.
மருத்துவ பரிசோதனைகளில் மாணவி பசியின் காரணமாக வாந்தி எடுத்துள்ளமை தெரியவந்ததுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்கள் ஊடாக வௌியான செய்திகளை தொடர்ந்து சம்பவம் குறித்து கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்தே பாடசாலையின் அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, குறித்த பாடசாலையின் அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர் பதவி நீக்கப்படுவார் என மாகாண கல்விப் பணிப்பாளர் நிர்மலா ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.