உலகம் ஆபத்தில் இருப்பதாகவும், அடுத்த சில நூற்றாண்டுகளில் மனிதர்கள் நிச்சயம் வேறு கிரகத்திற்கு இடம் பெயர வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் பிரபல அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாகிங் எச்சரித்துள்ளார்.
“உலகின் பல பகுதிகளில் பெரும் அழிவு ஏற்படப் போகிறது. இதனை என்னால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த அச்சுறுத்தல் மிகப்பெரிய அளவில், மிக அதிக எண்ணிக்கையில் நிகழப்போகிறது.” ஈவினிங் எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிக்கை இதனை வெளியிட்டுள்ளது.
“இந்த உலகத்திற்கு பருவநிலை மாற்றம் என்ற அழிவை நாம் பரிசாக அளித்துள்ளோம். பூமி வெப்பமடைதல், பனி துருவங்களில் உள்ள பனிக்கட்டிகள் கரைந்து வருதல், காடுகள் அழிப்பு, வன விலங்குகளின் அழிவு ஆகியவை நடந்து வருகின்றன. நாம் அறியாதவர்களாகவும், யோசிக்காதவர்களாகவும் இருக்கிறோம். ” இவ்வாறு அவர் நார்வேயில் நடைபெற்ற ஸ்டார்மஸ் விழாவில் பேசியுள்ளார்.
” இதற்கு முன்பும் மனித இனம் இதுபோன்ற அழிவைச் சந்தித்துள்ளதாக ஹாங்கின்ஸ் கூறியுள்ளார். இதற்கு முன்பு மனிதன் வளத்தைத் தேடி, வேறு இடத்தை தேட ஆரம்பித்தான். கொலம்பஸ் 1492 ஆம் ஆண்டு அமெரிக்காவை கண்டுபிடித்ததன் மூலம் இதனை செய்து காட்டினார். ஆனால் இப்போது கண்டுபிடிக்க வேறு எதுவும் இல்லை.
இப்போது மனிதன் தான் வசிக்க வேறு கிரகம் தேடுவது தான் நல்லது. பால்வழி அண்டத்தில் 100 பில்லியன் கிரகங்கள் உள்ளன. இதில் மில்லியனுக்கு மேற்பட்ட கிரகங்களில் உயிரினங்கள் வசிக்க முடியும். அங்கு வசிக்க காற்றும் தண்ணீரும் இருக்கும்.
பூமியில் இருந்து 30 ஒளியாண்டு தொலைவிற்குள் 1000 நட்சத்திரங்கள் உள்ளதாக கணித்துள்ளார். இதில் ஒரு சதவீத நட்சத்திரங்களில் மனிதர்கள் வசிக்க முடிந்தால் கூட, இது சாத்தியம்.
மனிதர்களின் நவீன கண்டுபிடிப்பின் மூலம் இன்னும் 200 முதல் 500 ஆண்டுகளுக்குள் நிச்சயம் மனிதன் வேற்று கிரகம் தேடிச் செல்வான்.
வேற்று கிரகத்திலும் ஒருவனை ஒருவனை ஆதிக்கம் செலுத்தும் முறை இருக்கும். தற்போது, மனிதர்களுக்குள் இன ரீதியான வேறுபாடு 2 மில்லியன் ஆண்டுகளாக இருந்து வருகிறது. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் நாகரீக சமுதாயம் தோன்றியது. வளர்ச்சி படிப்படியாக முன்னேறி வருகிறது. மனித இளம் இன்னும் பல ஆண்டுகள் நீடிக்க வேண்டுமென்றால், மனிதன் தைரியமாக வேற்று கிரகம் தேடிச் செல்ல வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!