தற்போது சேர்த்தலை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் தோழர் பி.பிரசாத் கடந்த 30ஆண்டாக ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வருகிறார் என்பதும், அரசியல் பொதுவாழ்வில் பயணம் மேற்கொள்ளும் சூழலிலும் ரமலான் மாதம் நோன்பிருக்க தவறுவதில்லை என்று கூறுகிறார்…
சொந்த ஊரில் தனது அண்டை வீடுகளின் வசித்தவர் அனைவரும் முஸ்லிம் குடும்பங்கள் என்பதாலும், உடன் பயின்றவர்கள் அனைவரும் முஸ்லிம் சமூகத்தின் நண்பர்கள் என்பதாலும் ரமலான் மாத நோன்பு குறித்து சிறு வயதிலேயே புரிதல் இருந்தது… கல்லூரியில் படிக்கும் காலத்தில் முஸ்லிம் நண்பர்களுக்கு ஐக்கியம் தெரிவித்து நோன்பிருக்க துவங்கியது பின்னர் பழகி விட்டது..
வறுமையான குடும்ப சூழலில் இருந்து வந்தவன் என்பதால் நோன்பு வைத்து பகலில் பசியுடன் இருப்பது சிரமமாக உணரவில்லை..
ஆனால் முப்பது தினங்கள் உணவை மட்டும் தவிர்ப்பது அல்லாமல் வேறு பல விஷயங்களையும் தவிர்ப்பதால் மனதை ஒரு நிலைப்படுத்த முடிவதும் ஆரோக்கியம் சார்ந்த சில நன்மைகள் உணர முடிகிறது..
ரமலான் மாதம் முழுவதும் நமக்கு உடல் ரீதியாக, மன ரீதியாக பல்வேறு சுயகட்டுப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்றால் மீதமுள்ள பதினொரு மாதங்களிலும் தீமையான காரியங்களில் ஈடுபடுவதை விட்டு விலகி இருக்க முடியும் என்பது தோழர் பி.பிரசாத் நம்பிக்கை…