• Sat. Apr 4th, 2026

பென்குயின்கள் , சீல்கள் வசிக்கும் தீவுகளிற்கும் வரிவிதித்த டிரம்ப்

Byadmin

Apr 4, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன் புதிய வரி விதிப்பிற்குள் , பென்குயின்கள் மற்றும் சீல்கள் மாத்திரம் காணப்படும் அன்டார்டிக்கின் தீவுகளும் இடம்பெற்றுள்ளமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது .

அதன்படி அவுஸ்திரேலியாவின் தென்மேற்கே 4000 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள மக்கள் யாருமில்லாத பென்குயின்கள் மற்றும் சீல்கள் மட்மே வாழும் ஹேர்ட் மற்றும் மக்டொனால்ட் தீவுகளுக்ளே டொனால்ட் டிரம்ப் வரிவித்துள்ளார்.பேர்த்திலிருந்து படகு மூலம் மாத்திரம் இங்கு செல்ல முடியும் – ஏழு நாள் பயணம்,இதனை விட முக்கியமாக கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக மனிதர்கள் அங்கு சென்றதில்லை.அமெரிக்க பொருட்கள் மீதான நியாயமற்ற வரிகளிற்கு பதிலடியாக புதிய வரி திட்டத்தை அறிவிப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் புதிய வரியை அவுஸ்திரேலியாவின் வேறு சில பிரதேசங்களும் எதிர்கொண்டுள்ளன.அவற்றை தவிர நோர்வேயின் தீவுக்கூட்டமான ஸ்வால்பார்ட்,போக்லான்ட் தீவுகள் ,பிரிட்டிஸ் இந்திய பெருங்கடல் பிரதேசம் ஆகியனவும் இந்த வரி பட்டியலில் உள்ளன.

இது உலகின் எந்த பகுதியும் டிரம்பின் வரிகளில் இருந்து தப்பமுடியாது – பாதுகாப்பானதல்ல என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.அவுஸ்திரேலியாவின் ஏனைய பகுதிகளை போல ஹேர்ட் அன்ட் மக்டொனால்ட் தீவுகள் மற்றும் கொக்கோஸ் தீவுகள் கிறிஸ்மஸ்தீவுகள் ஆகியன டிரம்பின் பத்து வீத வரியை எதிர்கொள்கின்றன.

இந்நிலையில் டிரம்ப் வரி விதித்த ஹேர்ட் தீவு முற்றிலும் பனிக்கட்டிகள் நிறைந்த மக்கள் வசிக்காத பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *