• Wed. Jun 10th, 2026

நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம்

Byadmin

Apr 20, 2025

இலங்கையின் சில பகுதிகளில் தற்போது மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெங்குவை பரப்பும் நுளம்புகள் மூலமாகவும் சிக்கன்குன்யா பரவுகிறது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்கள் ஒரே நுளம்புகளால் பரவுகின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர்,

இதன் காரணமாக, சுற்றுப்புறத்தை தொடர்ந்து சுத்தம் செய்வதன் மூலம் நுளம்புகளை பெருக்கத்தைத் தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *