• Sat. Oct 11th, 2025

நாளை வானில் தோன்றும் அதிசயம்

Byadmin

Apr 24, 2025

3 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய நிகழ்வை நாளை 25ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் சூரிய உதயம் வரை இலங்கையர்கள் வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பூகோள ஆய்வு பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜனக அடஸ்சூரிய தெரிவித்துள்ளார்.

வெள்ளி, சனி, மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கோள்களே இவ்வாறு தென்படவுள்ளதாகவும்  இக்கோள்கள், நாளை வெள்ளிக்கிழமை (25) அதிகாலை முதல் வானில் தெரியும் என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த அரிய நிகழ்வை இலங்கையர்கள் அதிகாலை 4 மணி முதல் சூரிய உதயம் வரை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என்றும் சுமார் ஒரு மணி நேரம் காணமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சூரிய கிரகணங்கள் போன்ற உள்ளூர் வான நிகழ்வுகளைப் போலல்லாமல், இந்த மூன்று இணைப்பு என்பது ஒரு உலகளாவிய நிகழ்வாகும், இது உலகின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து தெரியும் என்றும் இந்த நிகழ்வை காண்பதற்கு தெளிவான வானம் கொண்ட திறந்த வெளிகளில் நின்று பார்வையிடுமாறும் அறிவுறுத்தியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *