நான் மினாவிலும், அராபா மலையில் மேல் நின்றும் இறைவனை வணங்கினேன். எல்லாரையும் படைத்தவன் முன் நிற்கும் அந்த தருணம் முதல் முறையாக நான் முழுமையான மனிதனாக உணர்ந்தேன்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்துள்ளனர்.
வெள்ளை நிறத்தவர்கள் மற்றும் வெள்ளை நிறத்தல்லாதவர்கள் என இருவருக்கு இடையே சாத்தியமே இல்லாதது என நான் அமெரிக்காவில் இருந்த போது நம்பியிருந்தவற்றிற்கு மாற்றாக இங்கு நீல நிற கண்கள் உடையவர்களும் (வெள்ளையர்களும்), கருப்பு நிறமுள்ள ஆஃப்ரிக்கர்கள் என (வெவ்வெறு) எல்லா நிறத்தவர்களும் ஒரே இடத்தில் கூடி ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை காட்சிப்படுத்தும் விதமாக ஒரே விதமான சடங்குகளை செய்தனர்.
நான் இப்போது செல்லும் வார்த்தை உங்களை ஆச்சரியப்படுத்தலாம். ஆனால் இந்த புனித பயணத்தில் நான் பார்த்தவை அனுபவித்தவை நான் முன்னர் கொண்டிருந்த பல சிந்தனை முறைமைகளையும், முன்-முடிவுகளை மாற்றி விட்டது.
அமெரிக்கா/அமெரிக்கர்கள் இஸ்லாத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய மார்க்கம் தான் சமூகத்திலிருந்து இனவெறி பிரச்சனையை இல்லாமல் அழித்தொழிக்கும்.
அமெரிக்கர்கள் வெள்ளையர்களாக கருதும் பலரை இந்த பயணத்தில் சந்தித்துள்ளேன், அவர்களுடன் பேசியுள்ளேன், ஒன்றாக உணவருந்தியுள்ளேன்,
இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட அவர்களின் உள்ளங்களில் இருந்து வெள்ளை ஆதிக்க மனநிலையை ஓரிறை என்ற கொள்கை(Oneness of God- இஸ்லாம்) முற்றிலும் இல்லாமல் ஆக்கி இருந்தது.
நிறத்தைப் பொருட்படுத்தாமல், எல்லா நிறத்தவர்களும் ஒன்றாக நேர்மையான, உண்மையான சகோதரத்துவத்துடன் பழகுவதை நான் இதற்கு முன்பு எங்கும் பார்த்ததில்லை.