ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சு சார் ஆலோசனைக் குழு நேற்று நாடாளுமன்றத்தில் கூடியது.
இதில் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா, முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்த கடற்படையின் உதவியைப் பெறுதல், வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைகள் போன்ற பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள், குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
இதன்படி, நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் கூடியது பாதுகாப்பு ஆலோசனைக் குழு
