அப்பா, அண்ணா, அச்சச்சோ என்று அழைப்பது வழக்கத்தில் உள்ளது. அதை அப்படியே ஆக்ஸ்போர்டு அகராதியில் ஆங்கில வார்த்தையாக இடம் பெற செய்துள்ளனர்.
உலகின் முக்கிய மொழிகளில் அதிகமாக பேசப்படும் வார்த்தைகளை ஆங்கில வார்த்தைகளாக இடம் பெறச் செய்யும் வழக்கத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடை பிடித்து வருகிறது.
மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் இதற்கான வார்த்தை சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு இதுவரை உலகின் பல மொழிகளில் உள்ள சுமார் ஆயிரம் வார்த்தைகள், ஆங்கில வார்த்தைகளாக ஆக்ஸ்போர்டு அகராதியில் இடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில் ஆக்ஸ் போர்டு ஆங்கில அகராதியின் புதிய பதிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில் இந்திய மொழிகளில் இருந்து 70 வார்த்தைகள் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
தமிழ், தெலுங்கில் ‘அண்ணா’ என்று மூத்தவர்களை அழைப்பது வழக்கத்தில் உள்ளது. அதை அப்படியே ஆங்கில வார்த்தையாக இடம் பெற செய்துள்ளனர்.
‘அண்ணா’ என்பது ஏற்கனவே ஆக்ஸ்போர்டு அகராதியில் நாணயமான ‘‘அணா’’வை குறிக்கும் பெயர்ச் சொல்லாக உள்ளது. தற்போது அண்ணா 2 (அண்ணன்) என்று குறிப்பிட்டு சேர்த்துள்ளனர். அப்பா என்ற உருது வார்த்தையும் ‘‘தந்தை’’யை குறிக்கும் என்று அந்த அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆச்சரியமான தகவல் அல்லது சந்தேகப்படும் படியான தகவலை கேள்விப்படும் போது ‘‘அச்சச்சோ’’ என்பார்கள். அந்த வார்த்தையும் ஆங்கிலமாக மாறியுள்ளது.
சூர்ய நமஸ்காரமும் ஆங்கிலமாகியுள்ளது. இந்திய மொழிகள், வார்த்தைகளில் தமிழ் மொழியில் உள்ள வார்த்தைகள்தான் அதிக அளவில் ஆங்கிலமாக மாறி ஆக்ஸ்போர்டு அகராதியில் இடம்பிடித்துள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!