• Sat. Oct 11th, 2025

காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி

Byadmin

Jul 14, 2025

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்திகதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்களை மீட்பதற்காக, காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது. இந்நிலையில், 21 மாதங்களாக நடந்து வரும் போரில், காசா பகுதியில் 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

இந்தநிலையில் காசா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பொறுப்பை, காசா மனிதாபிமான அறக்கட்டளையிடம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வழங்கியுள்ளன. இங்கு நாளொன்றுக்கு ஐந்து சரக்கு லாரிகளில் நிவாரண பொருட்கள் வருகின்றன. அவற்றை பெறுவதற்கு தினமும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

இந்தநிலையில், நுசைரத் அகதிகள் முகாமில் தண்ணீர் விநியோக இடத்தில் இஸ்ரேல் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் சந்தை மற்றும் தண்ணீர் விநியோக இடத்தில் இருந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதாகக் கூறிய இஸ்ரேல் ராணுவம், தற்போது இது குறித்து விசாரித்து வருவதாக விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *