• Sat. Oct 11th, 2025

கிண்ணியாவில் மின் துண்டிப்பு:மக்கள் பெரும் அவதி!

Byadmin

Jun 3, 2017

கிண்ணியாவின் சில இடங்களில் அடிக்கடி முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு செய்யப்படுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.இது பல மணிக் கணக்கில் துண்டிப்பு செய்யப்படுகின்றது தற்போது இன்று (03) காலை 09.30 மணியளவில் செய்யப்பட்ட முன்னறிவித்தலற்ற மின்துண்டிப்பு சுமார் நான்கு மணித்தியாலயம் கடந்தும் இது வரைக்கும் மின்சாரம் வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் விடயம் தொடர்பில் பல முறை சம்பர்தப்பட்ட அதிகாரிகாளுக்கு அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமை குறித்து மக்கள் கவலையடைகின்றனர்.இலங்கை மின்சார சபை கிண்ணியா அலுவலகம் இவ்விடயத்தில் அசமந்தப்போக்குகளையே தொடர்ந்தும் காட்டி வருகின்றனர்கள்.மேலும் இது தொடர்பாக கிண்ணியா பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலாவது இவ் மின் துண்டிப்பு தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிக அக்கரை செலுத்துவார்களா?

உடனுக்குடன் சில விடயங்களுக்கு ஊடக அறிக்கையிடும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்விடயத்திலும் கரிசனை காட்டுவதுடன் மின்சார துண்டிப்புக்களை வரையறையோடும் முன்னறிவிப்பு செய்தும் துண்டிக்க நடவடிக்கை எடுக்கவும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *