• Sat. Oct 11th, 2025

மின்சாரத்தை நிறுத்திவிட்டு, பள்ளிவாசல் மீது தாக்குதல் – திருகோணமலையில் இனவாதம் (படங்கள்)

Byadmin

Jun 3, 2017
திருகோணமலை – மனையாவழி பள்ளவாசல் மீது இன்று சனிக்கிழமை -03- அதிகாலை தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இதனால் பள்ளிவாசலுக்கு சிறியளவு சேதம் ஏற்பட்டுள்ளது.  பற்றக்கூடிய திரவம் நிரப்பப்பட்ட குண்டுடினால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளது. தாக்குதலை அடுத்து  5 நிமிடங்களின் பின்னர் மீண்டும் மின்சாரம் வந்துள்ளது. பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது.
அருகில் கடற்படை முகாம் ஒன்றும் அமைந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற பகுதியில், களத்தில் நின்ற முக்தார் என்ற சகோதரர் இவற்றை ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *