சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் புகழ்பெற்ற இராஜதந்திரியும் கல்வியாளரும் எழுத்தாளருமான கிஷோர் மஹபூபானி இடையே விஷேட சந்திப்பொன்று இன்று (19) நடைபெற்றது.
சிங்கப்பூரின் அனுபவத்திலிருந்து இலங்கை பல தனித்துவமான பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்றும், பயனுள்ள மற்றும் மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகளை வகுக்கும்போதும் அவர்களின் திறனை மேம்படுத்துகின்ற போதும் இலங்கையின் அரச தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் தமது நிபுணத்துவ அறிவை பகிர்ந்துகொள்வதில் இணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் கிஷோர் மஹபூபானியிடம் கேட்டுக் கொண்டார்.
சிங்கப்பூரில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பல நடைமுறைப் பாடங்கள் உள்ளன என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் , இலங்கைக்கு வருகை தந்து கொள்கை வகுப்பாளர்களுடன் நேரடியாக ஈடுபடுமாறு திரு. கிஷோர் மஹாபூபானிக்கு அழைப்பை விடுத்தார்.