• Sun. Oct 12th, 2025

தாயும், மகளும் மரணம்

Byadmin

Aug 20, 2025

குருணாகல் – மதியாவ பிரதேசத்தில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான தக்ஷிலா சுபாஷினி மற்றும் 53 வயதுடைய அவரது தாயார் இனோகா குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யானை தாக்கியதில் தாயும் மகளும் அம்பன்பொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலத்த காயமடைந்த தாய், மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு வைத்து அவர் உயிரிழந்தார்.

காட்டு யானைகள் வழக்கம் போல் வந்திருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். நேற்று காலை 9.00 மணியளவில், வயலில் தாயையும் மகளையும் காட்டு யானை தாக்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *